வாழைப்பழத்துடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வெண்ணெய்யை உருக்கியோ அல்லது திட நிலையிலோ பயன்படுத்தலாம். ஒப்பனைக்கு பயன்படுத்தும் பிரஸ் மூலம் முகத்தில் மென்மையாக தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மின்னும்.