மயோனைஸ் மற்றும் கற்றாழை மாஸ்க்: 1 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு மாஸ்க் போல் செய்து கொள்ளவும். இந்த மாஸ்கை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு வெந்நீரால் முகத்தை கழுவவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவதால், முகத்திற்கு நீர்சத்து அதிகரிக்கிறது.
மயோனைஸ் மற்றும் பேக்கிங் சோடா மாஸ்க்: 1 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும். இந்த கலவையை தடவிய பிறகு, மென்மையாக மசாஜ் செய்யவும்.
பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கும்.
மயோனைஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய் மாஸ்க்: மயோனைஸ் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஒவ்வொரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு மாஸ்க் போல் செய்து கொள்ளவும்.
இந்த மாஸ்கை முகத்தில் தடவவும். மென்மையாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்வதால் வயது முதிர்வு தடுக்கப்படும்.
மயோனைஸ் மற்றும் எலுமிச்சை சாறு மாஸ்க்: 2 ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு மென்மையான க்ளென்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.
சீரான சரும நிறத்தை பெற இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம். சரும பாதிப்பில் இருந்து விலகி, அழகான சருமம் பெற மேலே கூறியவற்றை முயற்சித்து பார்க்கவும்.