முகம் பளபளப்பாக இயற்கையான முறையில் செய்யப்படும் அழகு குறிப்புகள்!!

1. தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
 
2. தேங்காய் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
 
3. மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
 
4. தேநீர் வடிகட்டிய பிறகு மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து தலையில் தேய்த்து குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
 
5. கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

 
6. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகலை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
 
7. பால், கடலைமாவு, மஞ்சல் தூள், சந்தனம் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பலபலப்பாகவும் மாறும்.
 
8. தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப்பசை குறையும்.
 
9. நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.
 
10. கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறையும்.
 
11. 3 தேக்கரண்டி புதினா இலைச்சாறு எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து நன்றாக குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து காய்ந்ததும் வெதுவெதுப்பான சூட்டில் கழுவி வந்தால் முகப்பரு குறையும்.
 
12. வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்