தலைமுடி உடைந்து மெலிதாவதை குறைக்க உதவும் அற்புத குறிப்புகள் !!

வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (15:16 IST)
இன்றைய காலக்கட்டத்தில் பலர் கூந்தல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். முடியின் வேர்கால் பலவீனப்படுவதாலும் இராசயனம் பொருட்களை பயன்படுவதாலும் முடி அதிகம் கொட்டுகின்றது.


இதற்காக பணத்தை அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி ஊறவைத்த நீரே போதுமானது. அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் ஊற்றி அதில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அரிசியை வடிகட்டிவிட்டு அந்த நீரை மட்டும் பிரிட்ஜில் குளிர வைக்கவும்.

ஒரு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனை வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். பின்பு அரிசி ஊறவைத்த நீரில் வெங்காய சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு உச்சந்தலை உள்பட தலை முழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விடலாம். வெங்காய வாசனையை போக்குவதற்கு ஷாம்பு பயன்படுத்திக்கொள்ளலாம்.

அரிசியை ஊறவைத்து ஒரு கப் நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு கிரீன் டீ பேக்கை போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.

பின்பு அதனுடன் அரிசி நீரை சேர்க்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்