வறுத்த பூண்டைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும். இரத்த நாளங்கள் லகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் தூரத் துரத்திவிடலாம்.
வறுத்த பூண்டை சாப்பிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கி, பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து உடல்நலத்தைக் காக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும். அடுத்த இரண்டு மணி நேரத்தில், உடலின் வளர்சிதைமாற்றம் தூண்டப்படும், தேவையில்லாத நீர், கொழுப்பு குறையும்.
6-7 மணிநேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.