வறண்ட சருமத்துக்கு நிவாரணம் அளிக்கும் அற்புத அழகு குறிப்புகள் !!

செவ்வாய், 31 மே 2022 (12:53 IST)
தக்காளி பெரும்பாலும் எண்ணெய் சருமத்தைக் கொண்டவர்களுக்கு பலனளிக்கும். இருப்பினும், வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் இதைச் சாறாக பிழிந்து அதை முகத்தில் தடவி உலர வைத்து, பின்பு அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.


ஆப்பிள் முழுவதுமே வறண்ட சருமத்துக்கு நிவாரணம் அளிக்கக்கூடியது. ஆப்பிளைத் தோலை நீக்கிவிட்டு, அதைத் துண்டு துண்டாக நறுக்கி, பாலில் போட்டுக் கொதிக்க வையுங்கள். கெட்டியாகத் தயிர் போல ஆகிவிடும். அதை நன்றாக ஆறவைத்து தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து முகத்தில் பூசி, சுமார் அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்பு கழுவினால் முகம் பொலிவு பெறும்.

ஆப்பிள் துண்டுகளை நன்றாக அரைத்து தேன், ஓட்ஸ் பவுடர், ஆகியவற்றுடன் சேர்த்து க்ரீம் போல செய்து, அரை மணி நேரம் முகத்தில் போட்டு பின்பு கழுவலாம். இரண்டு வழிகளிலும் வறண்ட சருமத்தைப் போக்க முடியும்.

தயிரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட மோரை, முகத்தில் தடவி, சிறிது நேரம் உலரவைத்து, பின்பு நன்கு கழுவினால், முகப்பொலிவை உணரலாம்.

சூட்டைத் தணிக்க வெள்ளரிக்காய் உதவும். வெள்ளரியைத் துண்டு துண்டாக நறுக்கி முகத்தில் தடவி உலர வைக்கலாம். 20 முதல் 30 நிமிடங்களில் சருமத்தை பளபளப்பாக்கி விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்