எலுமிச்சை பழத்தில் ஒளிந்து உள்ள மருத்துவ குணங்கள்!!

திங்கள், 29 மே 2017 (14:42 IST)
எலுமிச்சை பழம் எளிதில் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பழம். ஆனால், அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அவற்றை இங்கு காண்போம்...


 
 
காபி அல்லது தேநீரில் பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து பருகி வந்தால் தலைவலி குணமாகும்.
 
கோடையில் ஏற்படும் அதிக தாகத்திற்கு எலுமிச்சை சாறு நல்ல பலன் தரும்.
 
எலுமிச்சை பழத்தின் சாறு எடுத்து தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி நீங்கும்.
 
எலுமிச்சை சாறோடு தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சார்ந்த பிச்சனைகள் நீங்கும், கல்லீரம் பலம் பெரும்.
 
எலுமிச்சை பழம் தாதுவை கெட்டிப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வை தரும். மேலும், உடலில் ஏற்படும் நமைச்சலை போக்கும்.
 
எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.
 
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாலும் வலிக்கு இது சரியான தீர்வாக எலுமிச்சை சாறு இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்