சப்போட்டா பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரிய தகவல்..!

Mahendran

வெள்ளி, 15 மார்ச் 2024 (21:40 IST)
சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏரளாமான நன்மைகள் என கூறப்படும் நிலையில் இதில் என்னென்ன  ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதை பார்ப்போம்

சப்போட்டா பழத்தில்  வைட்டமின்கள் A, C, E மற்றும் K மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இது இயற்கை சர்க்கரை நிறைந்தது என்பதால், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.

நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும்.  குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள  பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. மேலும்  இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

 வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.  சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.  மேலும் எலும்புப்புரை போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.

மேலும்  சப்போட்டாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை வளர்வதைத் தடுக்க உதவும்.  சப்போட்டாவில் உள்ள இரும்புச்சத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது.  கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆனால் அதே நேரத்தில்  சப்போட்டா பழம் அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மேலும்  நீரிழிவு நோயாளிகள் சப்போட்டா பழம் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்