பச்சரிசியை விட புழுங்கல் அரிசி நல்லதா?

வெள்ளி, 14 ஜூலை 2023 (19:28 IST)
நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி ஆலையில் அரைத்து அதன் உமியை  நீக்கினால் அது பச்சரிசிஎன்பதும் நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் வேகவைத்து வெயிலில் உலர்த்தி பின்னர் உமியை நீக்குவதால் கிடைப்பது புழுங்கல் அரிசி என்பதும் தெரிந்ததே. 
 
நெல்லை வேக வைக்கும் போது அதில் நார்ச்சற்று மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி, பச்சரிசியை விட அதிகம் ஊட்டச்சத்து உள்ளதாக கருதப்படுகிறது. 
 
மேலும் புழுங்கல் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றும் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.
 
எனவே நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவருக்கும் பச்சரிசியை விட புழுங்கல் அரிசி சிறந்தது என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்