பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்

திங்கள், 27 பிப்ரவரி 2017 (16:48 IST)
பிளாஸ்டிக் அரிசி சில கிழங்கு வகைகளுடன் பிளாஸ்டிக் சேர்த்து உருவாக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் அரிசி பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படுகிறது என்று கொரியன் மற்றும் மலேசியன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இப்படி தயாரிக்கப்படுகின்ற அரிசிகள் அதிகளவில் அரிசியை உணவாக உட்கொள்ளும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது இந்த பிளாஸ்ட்டிக் அரிசியை உட்கொள்ளும் போது பல விதமான வயிற்று நோய்கள் அதிகளவில் ஏற்படுகின்றன. குறிப்பாக ஜீரணம், உடல் மந்த நிலை, இரைப்பையில் கோளாறு, சிறுநீரகத்தில் கோளாறு என பல்வேறு நோய்களை உண்டாக்குகின்றது இந்த அளவிற்கு கெடுதல் கொடுக்கும் பிளாஸ்டிக் அரிசியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இங்கே காணலாம்.


 

 
அரிசியை தண்ணீரீல் போடும் போது அந்த அரிசியானது தண்ணீரீல் மூழ்கினால் அது நல்ல அரிசி. ஆனால் அதற்கு மாறாக அரிசியானது தண்ணீரின் மேலே மிதந்தால் அது பிளாஸ்டிக் அரிசி என்பதை அறியலாம்.
 
பொதுவாக அரிசியை வேக வைக்கும் போது அதன் மேல் ஸ்டார்ச் போன்ற படலத்தை காணலாம். ஆனால் கண்ணாடி போன்று ஒரு படலம் வருமாயின் அது பிளாஸ்டிக் அரிசி தான் எனபதை உறுதி செய்யலாம். அந்த கணணாடி போன்றப் படலத்தை சூரிய வெயிலில் வைக்கும் போது அது பிளாஸ்டிக்காக மாறும்.
 
பிளாஸ்டிக் அரிசியால் உண்டான சாதத்தை நசுக்கினால் அது கைகளில் ஒட்டாது.மேலும் பல நாட்கள் அது கெட்டுபோகாமலும் இருக்கும். 



 
பிளாஸ்ட்டிக் அரிசியை போன்றே நம்மை ஏமாற்றி நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து பணம் சம்பாதிப்பதற்க்காக பிளாஸ்டிக் முட்டைகளையும் தமிழகத்தில் இறக்குமதி செய்துள்ளனர். இந்த முட்டையின் ஓடானது சுண்ணாம்பு கொண்டு தயாரிக்கப்படுகிறது அதன் உள்ளே இருக்கும் வெள்ளை கருவானது கால்சியம் குளோரைடு, சோடியம் அல்ஜினைட் இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் பல வேதிப் பொருட்களுடன் மஞ்சள் கலர் கலந்து முட்டையின் மஞ்சள் கரு தயாரிக்கப்படுகிறது  இந்த முட்டையை நாம் உண்ணும் போது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. மேலும் வயிற்றுப்போக்கு, குடல் புண், ஜீரணக் கோளாறு, பித்தப் பை பாதிப்பு போன்றவை உருவாக்குகிறது. இவ்வளவு கெடுதல் தரும் இந்த நகல்(Duplicate) முட்டையை எப்படி கண்டுப்பிடிப்பது என்பதை பார்ப்போம்
 
அசல்(Original)முட்டையை நம் காதருகில் வைத்து குலுக்கினால் அதில் எந்தவித சத்தமும் கேக்காது ஆனால் பிளாஸ்ட்டிக் முட்டையை குலுக்கினால் உள்ளே இருக்கும் திரவம் ஆடும் சத்தத்தை கேட்க முடியும். அந்த குலுக்கிய முட்டையை உடைத்து பார்த்தால் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பதை காணலாம். ஆனால் நல்ல முட்டை அப்படி கலக்காது


 
அசல் முட்டையின் ஓட்டில் மிக மிக நுண்ணிய துளைகள் காணப்படும். ஆனால் பிளாஸ்ட்டிக் முட்டையில் அப்படி எந்த துளைகளும் இருக்காது. இதை நம்மால் எளிதில் கண்டறிய இயலாது. எனவே இருட்டான இடத்தில் டார்ச் வெளிச்சத்தினை முட்டையின் மீது படும்படி அடித்தால் அந்த நுண்ணிய துளைகள் தெரியும்.
 
இப்படிப்பட்ட கலப்படமான பொருட்களை நாம் அன்றாடம் பார்த்து பார்த்து வாங்குவது கடினம். ஆனால் நமது உடல் ஆரோக்கியம் மீது அக்கறை கொள்வது நமது ஆயுளை அதிகரிக்கும். மேலும் இது போன்ற பொருட்களை வாங்குபவர்களை விட விற்பனை செய்பவர்கள் லாபத்தை விட மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பொருட்களை கவனமாக இறக்குமதி செய்தால் அதிகளவில் கலப்படப் பொருட்களை தவிர்க்கலாம்.  
 

வெப்துனியாவைப் படிக்கவும்