ஊறுகாயில் உள்ள நொதித்தல் செயல்முறையால் உருவாகும் லாக்டிக் அமிலம், செரிமான சக்தியை அதிகரிக்கவும், குடலில் உள்ள ஆரோக்கியமான நுண்ணியிர்களை வளர்க்கவும் உதவுகிறது. ஊறுகாயில் உள்ள புளிப்பு மற்றும் காரத்தன்மை பசியைத் தூண்டும். ஊறுகாய் செய்ய பயன்படுத்தப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.சில ஊறுகாய் வகைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன, அவை செல் சேதத்தைத் தடுக்க உதவுகின்றன.
ஊறுகாயில் அதிக அளவு உப்பு சேர்க்கப்படுவதால், அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சில ஊறுகாய் வகைகளில் அதிக அளவு எண்ணெய் சேர்க்கப்படுகிறது, இது எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும். கெட்டுப்போன ஊறுகாயில் பாக்டீரியாக்கள் வளரக்கூடும், அவை உணவு விஷத்திற்கு வழிவகுக்கும்.