அனைத்துத் திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தும்படி ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவு

சனி, 26 பிப்ரவரி 2022 (23:57 IST)
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில்     நேற்று  முன் தினம் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கின.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்து. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்  உலக நாடுகள் யாரும் உக்ரைனுக்கு உதவ முன்வரவில்லை. ரஷ்யாவின் மீது பொருளாதாரத்தடைகள் தண்டி          உலக நாடுகள் எதாவது செய்ய வேண்டுமென          உ க்ரைன் அதிபர் ஜெ           ஜெலன்ஸகி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இ ந் நிக்லையில், ரஷ்ய படைகள் உக்ரைனில் நடத்திய தாக்குதலில்     சுமார் 3,500  படைவீரர்களையும், 100க்கும் மேற்பட்ட டாங்கிகள் இழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் கூறினார்.          

மேலும், ரஷியா தரப்பில் 14 விமானங்களும், 8 ஹெலிகாப்டர்களையும், 102 டாங்கியளை ரஷ்ய  இழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்ய தரப்பு கூறிய  நிலையில், உக்ரைனும் பேச்சுவார்த்தைகுத்தயார் என தெரிவித்தது. இ ந் நிலையில்,

சர்வதேச நாடுகள் இப்பிரச்சனையைக் கூர்ந்து  கவனித்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

இருதப்பிலும் 3 வது நாளாக தாக்குதல் வலுத்துள்ளதால் இந்தப் பலி எண்ணிக்கை அதிக்கரித்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், உக்ரைன் நாட்டின் மீது அனைத்துத் திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தும்படி ரஷ்ய ராணுவத்திற்கு  ரஷ்ய அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்