மழை நாட்களில் மட்டுமே கிடைக்கும் புரத சத்துக்கள் நிறைந்த ஈசல்

மழை நாட்களில், மின்விளக்குகள் முன் படபடக்கும் சிறகுகளுடன் நடனமாடும் ஈசல்கள் பெரும்பாலும் மாலை நேரமே வேட்டைக்கு உகந்தது. அவற்றில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. அப்போதுதான் அவை வீடுகள் நோக்கிப் படை எடுக்கும். அதிகாலையிலும் சில சமயங்களில் வயல்வெளிகள், புல்வெளிகள் போன்ற இடங்களில் ஈசல் கூட்டம் சுற்றுவதுண்டு.

 
ஒரு பாத்திரத்தில் கால்பங்கு நீர் நிரப்பிக்கொள்ளவும். ஈசல்கள் அதிகம் சுற்றும் இடத்தில் அமர்ந்து அவற்றைக் கையால்  பிடிக்கவும். பிடித்த ஈசலை நீரில் போடவும். அதன் சிறகுகள் நீரில் பட்டவுடன் பெரும்பாலும் உதிர்ந்துவிடும்.  இல்லையென்றாலும் அவை பறக்கும் தன்மை போய்விடும்.
 
பின்பு ஒரு முறத்திலோ, அகலமான தட்டிலோ ஈசல்களைப் பரப்பி காய வைக்கவும். வெயில் வந்தால் ஈசல்களை வெயிலில்  காயவிடவும். காய்ந்தபின் சிறகுகளை நீக்கவும். நன்று காய்ந்த ஈசல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அரிசிப்பொரி போல  இருக்கும்.
 
சமைப்பது எவ்வாறு?
 
அரிசிப்பொறி, பொட்டுக்கடலை (வறுகடலை/உடைத்தகடலை), உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது எண்ணை விட்டு வாணலியில்  மிதமான சூட்டில் வறுக்கவும். நன்கு வறுபட்டவுடன், தட்டில் வைத்துப் பரிமாறவும். குளிர்கால மாலைகளில் எளிதாகக்  கிடைக்கும் இந்த புரதம் நிறைந்த ஈசல் வறுவலின் சுவையும் அருமையாக இருக்கும்.
 
ஈசலுக்கு உணவு மண்டலம் கிடையாது. வயிறு பகுதி முழுதும் கொழுப்பும் புரதமும் நிரம்பி இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்