உடலுக்கு அவசியமான சத்துக்களில் கால்சியம் சத்து முக்கியமான ஒன்று. கால்சியம் சத்து குறைவதால் எலும்பு, பற்களில் பாதிப்பு ஏற்படலாம். கால்சியம் சத்து குறைவதை எப்படி கண்டறிவது என தெரிந்து கொள்வோம்.
முதுகு வலி, மூட்டு வலி, நகம், பற்கள் பாதிப்பு ஏற்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம்.
நடுத்தர வயது ஆண்கள் நாள்தோறும் 1000 மி.கி கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் 1300 மி.கி கால்சியம் எடுக்க வேண்டும்.
கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பை ஹைபோகால்சீமியா என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு குழப்பம் மற்றும் ஞாபக மறதி அதிகரிக்கும்.
தசைப்பிடிப்பு, கை, பாதம், முகத்தில் உணர்ச்சி இல்லாமல் போவது கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாகும்.
கால்சியம் நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் கால்சியம் குறைபாடு பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
பாலில் அதிகளவு கால்சியம் உள்ளது. பால் தவிர பல காய்கறிகள், பழங்களிலும் கால்சியம் நிறைந்துள்ளது.
கால்சிய சத்து குறைபாடு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.