கழுத்தை சுற்றியுள்ள கருமையை போக்குவது எப்படி?

திங்கள், 6 மார்ச் 2023 (18:45 IST)
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று கழுத்தைச் சுற்றி கருமை நிறம் ஏற்படுவது என்பதும் இதை எப்படி போக்கலாம் என்பதையும் தற்போது பார்ப்போம். 
 
உருளைக்கிழங்கு தோலை சீவி சிறு துண்டுகளாக வைத்து சாறு பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த சாற்றை கழுத்தைச் சுற்றி தேய்த்தால் நாளடைவில் மறைந்து தோளின் உண்மையான நிறம் தெரியவரும். 
 
அதேபோல் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதில் தண்ணீர் கலந்து கருமை நிறம் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பின் குளித்தால் கருமை நிறம் அகன்று விடும்.
 
வெள்ளரிக்காய் சாறு மற்றும் பப்பாளி பழத்தின் தோல் ஆகியவையும் கருமை நிறத்தை போக்க உதவும். கழுத்தின் கருமை நிறத்தை போக்க பால் தேன் எலுமிச்சம் பழம் கலந்து அதை கழுத்தை சுற்றி தடவி பத்து நிமிடம் கழித்து வெந்நீரில் குளித்தால் உண்மையான நிறம் வந்துவிடும் 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்