சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சைவ உணவு, அசைவ உணவை விட நமது உடலுக்குப் பல வழிகளில் நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த சைவ உணவுகள், உடலில் சேரும் நச்சுகளை நீக்க உதவுகின்றன.
அசைவ உணவுகளில் உள்ள அதிகப்படியான புரதமும் கொழுப்பும், சிறுநீரகங்களுக்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்துகின்றன. மேலும், இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, எலும்புகளை வலுவிழக்கச் செய்கிறது. ஆனால், சைவ உணவில் இந்தச் சிக்கல்கள் இல்லை.
ஆனால், சைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் கார்போஹைட்ரேட் படிப்படியாக செரிமானம் அடைந்து, உடலுக்கு தேவையான குளுக்கோஸை சீராக வழங்குகிறது. இது உடலின் செயல்பாடுகளுக்கு தேவையான சக்தியைத் தருகிறது.