காதுகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற பலரும் பல்வேறு வழிகளை கையாளும் நிலையில் பலர் கையாள்வது இயர் பட்ஸ் வைத்து சுத்தம் செய்வதுதான். ஆனால் இயர் பட்ஸ் வைத்து சுத்தம் செய்வது ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
காதுகளில் இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி செவித்தன்மை பாதிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சாப்பிடும் உணவின் சுவை அறிவதற்கு காதில் நடுப்பகுதியில் செல்லும் நரம்பு இயர் பட்ஸ் பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்டு சுவையை அறிய முடியாத நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே குச்சி, ஹேர்பின் ஆகியவற்றை காதுக்குள் பயன்படுத்தக் கூடாது என்பது போலவே இயர் பட்ஸ்-ஐயும் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படுகிறது.