இடைவிடாமல் 3 மணிநேரம் டிவி பார்க்கும் பழக்கம் உண்டா? அதிர்ச்சி அளிக்கும் ஆய்வின் தகவல்!!

புதன், 15 மார்ச் 2017 (17:43 IST)
தினந்தோறும் 3 மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக தொடர்ந்து டிவி பார்த்துக் கொண்டேயிருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வரும் என தெரியவந்துள்ளது.


 
 
இன்றைய காலகட்டத்தில், டிவி இன்றி அன்றாட வாழ்வு முற்றுப் பெறுவதில்லை. ஆனால், இப்படி மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி டிவி பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஆய்வு நடத்தியது.
 
அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருமே 3 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக டிவி பார்ப்பதால் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
முக்கியமாக 3 மணிநேரத்திற்கு மேல் தினசரி டிவி பார்க்கும் பழக்கம் சிறு வயது பிள்ளைகளுக்கு இருந்தால், அவர்களின் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் இன்சுலின் சுரப்பே அதிகளவு பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் பாதிப்பு விரைவிலேயே வந்துவிடுவதாக அந்த ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்