குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஞாயிறு, 2 ஜூலை 2023 (18:30 IST)
குழந்தைகளுக்கு ஒவ்வாமை அல்லது ஏதாவது பொருளை மூக்கின் உள்ளே விட்டால் திடீரென மூக்கில் ரத்தக் கசிவு ஏற்படும். அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். 
 
குழந்தைகளுக்கு நீர் கோப்பு சதை வளர்வதுண்டு, மேலும் மூக்கும் தொண்டையும் இணைகிற இடத்தில் அந்த சதை வீங்குவதும் உண்டு.
 
இந்த இரண்டு காரணங்களால் மூக்கு அடைத்துக் கொள்ளும்போது குழந்தைகள் அடிக்கடி மூக்கை குடைவார்கள், அப்போது ரத்தம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 
 
குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தம் வந்தால் இது சில்லுமூக்கு தொல்லை தான் என அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வில் வீட்டிலேயே மருத்துவம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்