தண்ணீருக்கு அடியில் அக்வா ஆசனம்

ஞாயிறு, 24 ஜூன் 2018 (20:34 IST)
தண்ணீருக்கு அடியில் ஆசனம் செய்தால் நீண்ட ஆயுளை பெறமுடியுமாம்.


யோகாசனத்தில் அக்வா ஆசனம் எனப்படும் நீரடி ஆசனத்தில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். தண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும்படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த ஆசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்யப்படுகிறது.
 
வழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடியும்.
 
இந்த நீரடி ஆசனம் மூலம் நீடித்த ஆயுளை பெற முடியும் என யோகாசன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்