நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளன. தினமும் காலை ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், முடி பிரச்னைகள், சரும பிரச்னைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளன.
தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. முடி பிரச்னைகள், சரும பிரச்னைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம். ஊறுகாய் போட்டும் சாப்பிடலாம் .
அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.