முதலிரவில் மணப்பெண் கையில் பால் கொடுத்து அனுப்புவது ஏன் தெரியுமா?

ஞாயிறு, 26 மார்ச் 2017 (21:34 IST)
ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் முதலிரவு என்பது மறக்க முடியாத ஒன்று. திருமண தினத்தின் முதல் இரவில் தாம்பத்ய வாழ்க்கையை தொடங்கும் நிலையில் மணப்பெண் கையில் பால் கொடுத்து முதலிரவு அறைக்குள் அனுப்பி வைப்பது வழக்கம். இது ஏன் தெரியுமா?



 




பாலில் உள்ள சுவை, மணம், வெண்மை, போல இருவரது இல்வாழ்க்கையிலும் இன்பம், துன்பம், விட்டுக்கொடுத்தல் போன்றவை இன்று முதல் தொடங்கும் என்ற அர்த்தத்தில்தான் பால் கொடுத்து அனுப்பப்படுகிறதாம். 

மேலும் கணவன் பாதி பாலை குடித்துவிட்டு தரும் மீதி பாலை மனைவி வாங்கிக்கொண்டு, 'இனி உங்கள் பாதையே என் பாதை, எந்த நிலையிலும் பாலின் உள்ள வெண்மை பிரியாதது போல் இறுதி வரை உன்னுடன் நான் இருப்பேன் என்ற அர்த்தத்தில் மனைவி அந்த மீதி பாலை அருந்துவாள்.

மேலும் பால் என்பதை அதிர்ஷ்டத்தின் பொருளாக நம் முன்னோர்கள் கருதி வந்தனர். பால் அருந்தி இல்வாழ்க்கையை தொடங்குவதால் தம்பதிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும் என்றும், திருமண தினத்தில் பகல் முழுவதும் பிசியாக இருந்ததால் சோர்வாக இருக்கும் தம்பதிகளின் உடலை புத்துணர்ச்சி அடைய உதவும் பானம் பால் என்றும் கூறப்படுகிறது. இது உடலில் உள்ள சோர்வை போக்கு சுறுசுறுப்பை தருவதால் முதலிரவு அன்று இருவரும் சிறப்பான தாம்பத்யத்தை அடைய முடியும் என்பதும் இதில் அடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்