முதல்முறை சந்திக்கும் குட்டிக் குழந்தையும் செல்ல நாயும் : சுவாரஸ்யமான வீடியோ

புதன், 23 செப்டம்பர் 2015 (16:27 IST)
தன் எஜமானின் குழந்தையை முதன் முதலில் பார்க்கும் நாய் எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.


 

 
பொதுவாக, தன் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், தங்களுக்கு ஒரு குழந்தை பிறகு பிறக்கும்போது தான் செல்லமாக வளர்த்த நாய் எப்படி அதை எதிர் கொள்ளும் என யோசிப்பதுண்டு. அவர்களின் சொந்தப் பிள்ளை புதுவரவாக வீட்டுக்குள் வரும்போது நாய், கொஞ்சம் பொறாமையுடன் தூரத்திலிருந்துதான் கண்காணிக்கும்!
 
அமெரிக்காவில் வாழும் தம்பதியினர், தங்களது குழந்தையை, தாங்கள் வளர்க்கும் செல்ல நாய் ஏற்றுக் கொள்ளுமா? என்கிற சந்தேகத்தில், அந்த நாயின் கண்ணில் படாமல், சில மாதங்கள் தனித் தனியாகவே வைத்திருந்தனர்.
 
சமீபத்தில் தங்கள் குழந்தையையும், செல்ல நாயும் ஒருவரை ஒருவர் சந்திக்க விட்டு, அங்கு நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வீடியோவாக எடுத்து சமூகவலைத் தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
 
அந்த வீடியோவை கண்டு மகிழுங்கள்..
 

வெப்துனியாவைப் படிக்கவும்