அடோப் பிளாஷ் பயனர்களின் கவனத்திற்கு....

புதன், 18 அக்டோபர் 2017 (14:57 IST)
இன்டர்நெட் பயன்பாடுகளில் அடோப் பிளாஷ் ப்ளேயர், மல்டி மீடியா போன்றவற்றில் ஹேக்கர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக அடோப் சிஸ்டம்ஸ் தெரிவித்துள்ளது. 


 
 
அடோப் பிளாஷ் ப்ளேயர் வீடியோவை ஒருங்கிணைப்பதற்காக விளம்பரங்கள் மற்றும் பல்வேறு வலைப்பக்க பிளாஷ் கூறுகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. 
 
மேலும் அண்மைக்காலத்தில் உயர் இணைய பயன்பாடுகளை உருவாக்க பயன்படுகிறது. அடோப் பிளாஷ் ப்ளேயர் தற்போது சில ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னனு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
 
கூகுள்-இன் க்ரோம் மற்றும் மைக்ரோசாப்ட் எட்ஜ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகியவற்றையும் டெஸ்க் டாப் பதிப்பையும் பாதிக்கும் சிக்கலை சரி செய்ய அடோப் நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவத்துள்ளது.
 
ரஷ்யா, ஈராக், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த அடோப் பிளாஷ் ப்ளேயர் ஹேக்கிங் பிரச்சனையில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்