தனி நபர் கடனில் எத்தனை வகைகள் உள்ளது தெரியுமா???

புதன், 19 செப்டம்பர் 2018 (17:45 IST)
வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதைபற்றிய விவரங்களை முமுமையாக தெரிந்துக்கொண்டு கடன் பெறுவது சிறந்த ஒன்றாகும். அந்த வகையில் தனி நபர் கடன் பல்வேறு வகைகளில் வழங்கப்பட்டுகிறது. அவை என்ன என்பதை காண்போம்...
 
தனி நபர் கடன்:
தனி நபர் கடன் ரூ.40 லட்சம் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது.  தனி நபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது ரூ.5000 கடனாக பெற வேண்டும்.  
 
தனி நபர் கடனுக்கு கண்டிப்பாக கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் வட்டி விகிதம் மற்றும் கடனை செலுத்தும் கால அளவு மாறும். 
 
தனிநபர் கடன் பெற முகவரி மற்றும் அடையாள ஆவணம், வருமான சான்றிதழ், வங்கி அறிக்கை போன்றவை சமர்ப்பிக்க வேண்டும். தனி நபர் கடனில் சலுகைகள் ஏதும் கிடைக்காது. 
 
தனி நபர் கடனை 5 வருடங்களுக்கு செலுத்த வேண்டும். அதற்கு ஏற்றார் போல வட்டி விகிதம் உயரும். 
 
தனி நபர் கடன் வகைகள்: 
1. தொழில் கடன் 
2. திருவிழாக் கடன்
3. வீடு புதுப்பித்தல் கடன்
4. நிரந்திர விகிதக் கடன்
5. நுகர்வோர் நீடிப்பு கடன் 
6. திருமணக் கடன்
7. விடுமுறை காலக் கடன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்