டுவிட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிக உள்ள நிலையில், உடனுக்குடன் போட்டி குறித்து டுவிட் செய்வதும் வழக்கம். இதனால் ஐ.பி.எல். போட்டிகளை டுவுட்டரில் ஒளிப்பரப்பு செய்ய டிஜிட்டல் உரிமம் பெற டுவிட்டர் நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளை ஒளிப்பரப்பு செய்யும் உரிமம் ஏற்கனவே சோனி, ஜீ, இ.எஸ்.பி.என், ரிலையண்ஸ் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் வாங்கியுள்ள நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனமும் ஒளிப்பரப்புகாக டிஜிட்டல் உரிமம் பெற களத்தில் இறங்கியுள்ளது.
டுவிட்டரில் ஏற்கனவே கிரிக்கெட் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். அதோடு கிரிக்கெட் போட்டி குறித்த செய்திகளை அவ்வப்போது தொடர்ந்து டுவிட் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் ஒளிப்பரப்பு டிஜிட்டல் உரிமம் பெற்றுவிடால், ஐ.பி.எல். போட்டிகளை டுவிட்டரில் நேரலையாக காணலாம் என்று தெரிவித்தார்.