இலவச இன்டர்நெட்: ட்ராய் பரிந்துரை!!

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (10:52 IST)
ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க இலவச இன்டர்நெட் சேவையை அளிக்க வேண்டும் என்று ட்ராய் பரிந்துரை செய்துள்ளது.


 
 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கபட்ட பின்னர் ரொக்கமில்லா பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 
 
இதற்காக, நிதியமைச்சகமும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு ரொக்கமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வது பற்றி கற்பிக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளது.
 
இந்நிலையில், மத்திய அரசு வலியுறுத்தும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை புறநகர் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களும் பயன்படுத்த முன்வர வேண்டுமானால் இலவச இன்டர்நெட் சேவை அளிக்க வேண்டும்.
 
கிராம மக்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு டேட்டாவை இலவசமாக அளிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பரிந்துரை செய்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்