இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் சென்செக்ஸ் உயர்வு!

புதன், 13 ஏப்ரல் 2022 (10:31 IST)
இன்று இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 383 புள்ளிகள் உயர்ந்து 58,959 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

 
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் பங்குச்சந்தை சரிந்தது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஆனால் இன்று இரண்டு நாட்கள் சரிவுக்கு பின்னர் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 383 புள்ளிகள் உயர்ந்து 58,959 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 121 புள்ளிகள் உயர்ந்து 17,651 புள்ளிகளில் வர்த்தகமாகின்றது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்