அபராத தொகையை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ: விவரம் உள்ளே...

செவ்வாய், 13 மார்ச் 2018 (13:38 IST)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகை விதித்து வந்தது. தற்போது அந்த அபராத தொகையை குறைத்துள்ளது. 
 
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்கவேண்டும். மாநகரங்களில் வசிப்போர் ரூ.3,000, சிறு நகரங்களில் வசிப்போர் ரூ.2,000, கிராமங்களில் வசிப்போர் ரூ.1000 இருப்புத்தொகையாக வைத்திருக்க வேண்டும். 
 
இவ்வாறு இல்லாவிடில், வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதம் + ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ஆனால், தற்போது இந்த அபராத தொகை 75% வரை குறைக்கப்பட்டுள்ளது. 
 
மாநகரங்களுக்கு ரூ.15, சிறு நகரங்களுக்கு ரூ.12, கிராமங்களுக்கு ரூ.10 + ஜிஎஸ்டி வரி இனி வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டண குறைப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்