விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

வியாழன், 8 ஏப்ரல் 2021 (11:36 IST)
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீதான விலையை குறைத்து இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஆம், சாம்சங் கேலக்ஸி ஏ31 மாடல் விலை ரூ. 1,000 குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனிற்கு எக்சேன்ஜ் சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது விலை குறைப்பின் படி, சாம்சங் கேலக்ஸி ஏ31 மாடலின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999-க்கு கிடைக்கிறது. 
 
சாம்சங் கேலக்ஸி ஏ32 வாங்குவோரின் பழைய ஸ்மார்ட்போனிற்கு ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள அப்கிரேடு வவுச்சர் வழங்கப்படுகிறது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் / டெபிட் கார்டுகளுக்கு ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. செஸ்ட்மனி பயன்படுத்துவோருக்கு ரூ. 1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்