புது போன் வாங்கனுமா? செப்.15 வர வெய்ட் பண்ணுக்க.. வருகிறது ரெட்மி 9i !!

வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (10:26 IST)
சியோமி நிறுவனம் ரெட்மி 9i ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது என தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் தொடங்கி ரெட்மி 9A வரை 9 சீரிஸில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது மற்றுமொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. 
 
அதன்படி வெளியாகும் ஸ்மார்ட்போந்தான் ரெட்மி 9i. புதிய ரெட்மி 9i ஸ்மார்ட்போனில் டாட் டிராப் ஸ்கிரீன், 4 ஜிபி ரேம், பெரிய பேட்டரி, எம்ஐயுஐ 12 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. 
 
ரெட்மி  9i குறித்த இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. mi.com மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களில் இது விற்பனைக்கும் வரவுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்