108 MP கேமராவுடன் வந்திறங்கும் Mi 10: என்ன எதிர்பார்க்கலாம்? விலை என்ன?
செவ்வாய், 5 மே 2020 (13:59 IST)
சியோமி நிறுவனம் தனது Mi 10 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதியை அறிவித்துள்ளது.
சியோமி நிறுவனம் தனது Mi 10 ஸ்மார்ட்போனை சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்த நிலையில் தற்போது இந்தியாவில் மே 8 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகவுள்ளது.
இதன் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில், அமேசான் தளத்தில் விற்பனை நடைபெற கூடும் என தெரிகிறது, மேலும் இதன் விலை ரூ. 42,400 என நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.