டெபிட் கார்ட் கட்டணங்களில் திடீர் மாற்றம்: ஆர்பிஐ அதிரடி!!

திங்கள், 11 டிசம்பர் 2017 (14:08 IST)
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனையின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், இதனை சார்த்த தொழில் முறைகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 
 
இதனை மேலும் ஊக்குவிட்டும் வகையில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இந்த திட்டம் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
 
ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒழுங்குமுறை விதிகளை மேம்படுத்துவது தொடர்பான அறிக்கையில், சமீப காலங்களில் Point of Sale இயந்திரங்கள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. 
 
இதனால், டெபிட் கார்டுகளுக்கான MDR கட்டணங்களை முறைப்படுத்துவது அவசியமாகியுள்ளது. MDR என்பது வங்கிகள் வர்த்தக நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணமாகும். 
 
இதனை பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில் வசூலிப்பதற்கு பதிலாக மொத்த வரவு செலவு அடிப்படையில் வசூலிக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை 80 சதவீதம் அதிகரித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்