ஆர்காம் சொத்துக்களை ஜியோவிற்கு விற்பதில் சிக்கல்?

வெள்ளி, 23 மார்ச் 2018 (16:40 IST)
அனில் அம்பானியில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர் காம்) நிதி நெருக்கடியில் உள்ளதால், அதன் சில சொத்துகளை விற்று கடனை அடைக்க திட்டமிட்டது. ஆர்காம் நிறுவனத்தின் சொத்துக்களை ஜியோ நிறுவனம் வாங்குவதாக இருந்தது. 
 
கடந்த ஆண்டு டிசம்பர் கடன் சுமையை ரூ.39,000 கோடியாக குறைக்கும் பொருட்டு ஆர் காம் நிறுவனத்தின் வயர்லெஸ் ஸ்பெக்ட்ரம், டவர்கள், ஃபைபர்கள் மற்றும் எம்சிஎன் சொத்துகளை ஜியோ நிறுவனத்துக்கு விற்க முடிவு எடுக்கப்பட்டது.
 
ஆனால், தற்போது இதில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். உச்ச நிதிமன்றம் தங்களது இறுதி உத்தரவு வரும்வரை காத்திருக்க வேண்டும் அதற்கு முன்னர் சொத்துக்களை கைமாற்றக்கூடாது என குறிப்பிட்டுள்ளனராம். 
 
இதற்கான காரணம், ஆர்காம் நிறுவனம் சுவீடனைச் சேர்ந்த தொலைதொடர்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான எரிக்ஸன் நிறுவனத்திற்கு ரூ.1,012 கோடி பாக்கி உள்ளதால், எரிக்ஸன் தனது சொத்துகளை அனுமதியின்றி விற்ககூடாது என வழக்கு தொடர்ந்தது. 
 
இதனை ஏற்று உச்ச நிதிமன்றம் ஆர்காம் சொத்துக்களை அனுமதியின்றி ஜியோ நிறுவனத்திற்கு விற்ககூடாது என குறிப்பிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்