இந்தியாவை ஆள போகும் பதஞ்சலி

வெள்ளி, 5 மே 2017 (14:36 IST)
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் பன்னாட்டு துரித உணவு நிலையங்களுக்கு போட்டியாக பதஞ்சலி உணவு நிலையங்கள் நாடு முழுவதும் விரைவில் துவங்கப்பட உள்ளது.


 

 
பாபா ராம்தேவின் பதஞ்சலி கடந்த இரண்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து அதிகமான லாபத்தை ஈட்டி வருகிறது. இதனால் ஹிமாலயா, டாபர் ஆகிய நிறுவனங்கள் இந்திய சந்தையில் சரிவை சந்தித்துள்ளனர்.
 
இந்நிலையில் விரைவில் பதஞ்சலி, நாடு முழுவதும் உணவு நிலையங்கள் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இயற்கை முறையிலான ஆயூர்வேத உணவு நிலையங்கள் தொடங்கப்படும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
 
பன்னாட்டு துரித உணவு நிலையங்களான கே.எப்.சி. மற்றும் மெக்டொனால்டு ஆகிய நிறுவனங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமைத்துள்ளன. தற்போது பாபா ராம்தேவ் அறிவித்துள்ளன பதஞ்சலி உணவு நிலையங்கள் அதற்கு போட்டியாக களமிறங்க உள்ளது.
 
இந்திய பத்திரிக்கைகள் அனைத்தும் பதஞ்சலி உணவு நிலையங்கள் இந்திய சந்தையில் தாக்குப்பிடிக்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர். கட்டாயம் அதற்கு வாய்ப்புள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஆயூர்வேத தாயாரிப்பு, இயற்கை பொருட்கள் என கூறி இந்திய சந்தையை ஆக்கிரமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
விரைவில் பதஞ்சலி இந்திய சந்தையின் முக்கிய நிறுவனமாக உருவெடுக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மேலும் அண்மையில் பதஞ்சலியின் தேன், ஜாம் போன்ற பொருட்கள், இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் நடத்திய சோதனையில் தோல்வி அடைந்தது.
 
இந்திய பொருளாதாரத்தில் விரைவில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பதஞ்சலி நிறுவனம்.

வெப்துனியாவைப் படிக்கவும்