10 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (11:43 IST)
வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தவும் பற்றாக்குறையை சரி செய்யபும், 10 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
நாடுமுழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வெங்காயம் ஒரு கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்கப்பனை செய்யப்படுகிறது.
 
இந்நிலையில், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 ரூபாயை தாண்டும் என்ற அச்சம் நிலவுகிறது. வெங்காயத்தின் இந்த விலை உயர்வை கண்டித்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 10 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய சர்வதேச அளவில் மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது என்பது குறிப்டத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்