தரம் குறைவு காரணமாக 1.2 மில்லியன் கார்களை திரும்ப பெறும் நிசான்

திங்கள், 2 அக்டோபர் 2017 (16:45 IST)
ஜப்பானில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1.2 மில்லியன் கார்களை திரும்ப பெறுகிறது.


 

 
ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் உலகம் முழுவதும் ஏராளமான கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜப்பானில் வெளியான கார்களை திரும்ப பெற நிசான் முடிவு செய்துள்ளது.
 
அதன்படி அக்டோபர் 2014 முதல் செப்டம்பர் 2017 வரை உற்பத்தி செய்யப்பட்ட 1.2 மில்லியன் கார்களை திரும்ப பெறுகிறது. இதனால் நிசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஜப்பான் நாட்டின் கார்கள் தரம் தொடர்பான விதிமுறைக்கு நிசான் உற்பத்தி செய்த கார்கள் தரம் இல்லை என தெரியவந்துள்ளது.
 
இதற்காக நிசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்