உலகின் மிக லேசான மொபைல் போன்: வெறும் 30 கிராம்தான்!!

வெள்ளி, 14 ஜூலை 2017 (18:41 IST)
உலகின் மிக லேசான எடை கொண்ட மொபைல் போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. எலாரி என்ற நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.


 
 
லேசான எடை கொண்ட நானோபோனாக கருதப்படும் இந்த மொபைலின் எடை வெறும் 30 கிராம்தான். ப்ளூடூத், மியூசிக் ப்ளேயர், ரேடியோ போன்ற வசதிகளும் உள்ளன. 
 
4 நாட்கள் நீடிக்கும் திறன் கொண்ட பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 32 GB மெமரி கொண்டுள்ளது. ப்ளூடூத் மூலம் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களுடன் இதனை இணைக்கவும் முடியும்.
 
ரூ.3490 விலையில், ரோஸ் கோல்ட், கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்