ஐடிபிஐ வங்கியை வாங்கியது எல்.ஐ.சி. !

செவ்வாய், 22 ஜனவரி 2019 (15:15 IST)
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி ஐடிபிஐ வங்கியை வாங்கியுள்ளது.

ஐடிபிஐ வங்கி கடந்த காலாண்டில் மட்டும் 3600 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை அடைந்துள்ளது. இதற்கு முக்கியக்காரணமாக இந்த வங்கியின் வாராக்கடன் அளவு 31 சதவீதமாக உயர்ந்துள்ளதே ஆகும். ஐடிபிஐ வங்கியில் 1.5 கோடி பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.  18 ஆயிரம் ஊழியர்களாக வேலைப் பார்க்கின்றனர்.

இதனால் ஐடிபிஐ வங்கி தனது பங்குகளை விற்க முனவந்தது. ஐ.டி.பி.ஐ. வங்கியை வாங்குவதற்கான முயற்சிகளை கடந்த ஆண்டு ஜூன் முதல் எல்.ஐ.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  ஆகஸ்ட் மாதத்திலேயே மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்பதலையும் அளித்தது. இந்நிலையில் இப்போது ஐடிபிஐ நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் வங்கியின் பெரும்பாண்மை பங்குதாரராக மாறியுள்ளது.

இதுகுறித்துத் தெரிவித்துள்ள் ஐடிபிஐ வங்கி ‘ இந்த முடிவு, பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கும்.’ என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்