ஜிஎஸ்டி எதிரொலி: விலை உயர்வுக்கு அடிதளத்தை அமைத்தது எல்ஜி நிறுவனம்!!
செவ்வாய், 4 ஜூலை 2017 (18:19 IST)
ஜிஎஸ்டி அமலுக்கு முன்னர் 27 % வரை இருந்த நுகர்வோர் பொருட்கள் மீதான வரி இப்போது 28 % உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நுகர்வோர் பொருட்கள் அதாவது டிவி, குளிர்சாதனப் பெட்டி போன்ற எலக்டிரிக் மற்றும் எலக்டிரானிஸ் பிரிவில் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்பட்டது.
தற்போது ஜிஎஸ்டி அமுலுக்கு வந்ததால் இந்த பொருட்களின் விலை அதிகமாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த விலை உயர்வை எல்ஜி நிறுவனம் துவங்கி வைத்துள்ளது.
எல்ஜி நிறுவனம் எல்இடி டிவி, எல்ஜி ஸ்மார்ட் எல்இடி செட்கள் முதல் எல்ஜி யூஎச்டி எல்இடி செட்கள் என அனைத்து டீலர்களின் விலையில் 1.3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை விலை உயர்த்தியுள்ளது.
மேலும், பானசோனிக், சம்சாங், சோனி, எச்பி, லெனோவா போன்ற முன்னணி நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.