ரூ.10 லட்சத்துக்கான காப்பீடு 92 பைசாவில்: ஐஆர்சிடிசி அதிரடி

சனி, 27 ஆகஸ்ட் 2016 (10:52 IST)
விபத்துகள் ஏற்படும்போது இந்திய ரயில்வே அளிக்க வேண்டிய இழப்பீடு தொகைக்கு பதிலாகச் சரியான டிக்கெட் உள்ளவர்களுக்கு இந்தக் காப்பீட்டை வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.


 
 
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் வெளிநாட்டவருக்கு இந்தக் காப்பீடு திட்டம் பொருந்தாது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட், ஆர்ஏசி மற்றும் காத்திருப்பில் உள்ள டிக்கெட்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்தக் காப்பீடு அளிக்கப்படும்.
 
ரயில் பயணங்களின் போது ஏதேனும் பயங்கரவாத தாக்குதல், வழிப்பறி, துப்பாக்கிச் சூடு அல்லது தீ வைப்பு போன்ற அசம்பாவித சம்பவம் ஏற்படும் போது மரணம் அல்லது எழுந்திருக்க முடியாத அளவு ஊனம் ஏற்படும் போது ரூ.10 லட்சமும், உடலின் ஏதேனும் பாகத்திற்கு ஊனம் நேர்ந்தால் ரூ.7.5 லட்சமும், 2 லட்சம் வரை மருத்துவ செலவுகள் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்குப் போக்குவரத்து செலவாக ரூ. 10,000 காப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது பயணிகளின் விருப்பத் தேர்வே கட்டாயம் அல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிக்கெட் ரத்து செய்யும் போது காப்பீட்டிற்கான ப்ரீமியம் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.
 
இதேப் போன்று தனியார் ரெட் பஸ் டிக்கெட் நிறுவனமும் பயணிகளுக்கான விருப்ப காப்பிட்டு சேவையை ரூ.10-க்கு வழங்கப்படுவதுக குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்