ரேமண்ட்ஸ் நிறுவருக்கு நேர்ந்த அவல நிலை!!

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (13:19 IST)
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய் சிங்கானியா தற்போது பணமின்றி தவித்து வருகிறார்.


 
 
ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய் சிங்கானியா முதுமை மற்றும் ஓய்வைக் கருதி ரேமண்ட்ஸ் நிறுவன வணிகப் பொறுப்புகளை மகன் கவுதமிடம் ஒப்படைத்திருந்தார். 
 
ஆனால், அவரது மகன் நிறுவன பொருப்புகள் வந்தவுடன் அவரை துரத்திவிட்டார். இந்நிலையில், விஜய் சிங்கானியா மும்பை உயர்நீதிமன்றத்தில் மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விஜய் சிங்கானியாவை அனுமதிக்காமல் அவரது மகன் கவுதம் தாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
 
இந்த மனு தொடர்பாக ரேமண்ட்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதி. மேலும், விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்