அடுத்த டார்கெட் நாடாளுமன்ற தேர்தல்: மார்க் ஜூக்கர்பெர்க் ஓபன் டாக்!

வியாழன், 5 ஏப்ரல் 2018 (21:44 IST)
சமீபத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது.
இந்த நிகழ்வை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அம்பலப்படுத்தியது. இந்நிலையில், உலகம் முழுக்க நடக்க இருக்கும் தேர்தல் குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் பேட்டி அளித்து இருக்கிறார். 
 
அதன்படி 2018 தொடங்கி 2019 இறுதி வரை தேர்தலுக்கு மிக முக்கியமான காலம் என்று அவர் கூறியுள்ளார். இந்தியா, அமெரிக்கா (இடைக்கால தேர்தல்), பாகிஸ்தான், பிரேசில், மெக்சிகோ, ஹங்கேரி ஆகிய நாடுகளில் தேர்தலலில் பேஸ்புக் கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் சமயத்தில் மக்களின் மனதை பேஸ்புக் போஸ்டுகள் மூலம் மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. தேர்தலில் பேஸ்புக் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பின் இந்த முடிவை மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்துள்ளார்.
 
தேர்தல் குறித்து தவறான தகவல் கொடுக்கும் ஐடிக்கள் முடக்கப்படுமாம். இதனால் தேர்தலில் முறைகேடுகள் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று இதற்காக தனி குழுவை அமைத்து செயல்பட்டு வருகிறதாம் பேஸ்புக்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்