ஜியோ ஜிகா ஃபைபர் எதிரொலி: கலக்கத்தில் பிஎஸ்என்எல்; 50 ஜிபி கூடுதல் டேட்டா!

புதன், 11 ஜூலை 2018 (14:08 IST)
ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது ஜியோ ஜிகா ஃபைபர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் எதிரொலியாக பிஎஸ்என்எல் நிறுவனம் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
# பிஎஸ்என்எல் FTTH ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 விலை சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு 50 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கபப்டவுள்ளதாம். 
 
# ரூ.1,045 பிஎஸ்என்எல் ஃபைப்ரோ ULD 1045 CS48 சலுகையில் மாதம் 150 ஜிபி டேட்டா 30Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் குறைக்கப்படுகிறது. 
 
# ரூ.1,395 ஃபைப்ரோ BBG ULD 1395 CS49 சலுகையில் மாதம் 200 ஜிபி டேட்டா 40Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. 
 
# ரூ.1,895 சலுகையில் மாதம் 250 ஜிபி டேட்டா 50Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் தற்சமயம் கேரளாவில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. 
 
# ரூ.4,999 சலுகையில் 1500 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. 1500 ஜிபி வரையிலான டேட்டாவிற்கு 100Mbps வேகமும், அதன்பின் டேட்டா வேகம் குறைக்கப்படும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்