BSNL நிறுவனத்தில் ஓய்வுக்கு விண்ணப்பித்த 70 ஆயிரம் ஊழியர்கள்!

செவ்வாய், 12 நவம்பர் 2019 (09:51 IST)
பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 70 ஆயிரம் ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரு நிறுவனங்களும் நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த இரு நிறுவனங்களின் கடன்சுமை 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் கடன்சுமையை கட்டுப்படுத்தவும், மேலும் நிறுவனத்தை மேம்படுத்தவும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்நிறுவனங்கள் அறிவித்தன. 50 வயதுக்கு மேற்பட்டோர் விருப்ப ஓய்வு பெறலாம் என்ற நிலையில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் 50 வயதை கடந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 70 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

டிசம்பர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்