இதுகுறித்து அண்மையில் விளக்கமளித்த மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான், ஏற்கெனவே முதல் கட்டமாக இந்தத் திட்டம் ஜம்மு - காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியாணா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளிலும் கடந்த 2010-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கேரளம், கர்நாடகம், ஒடிஸா, கோவா, தெலங்கானா, மகாரஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் இந்த பிஎஸ் - 4 எரிபொருள் விநியோகத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில்தான் அடுத்த ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பெட்ரோலியப் பொருள்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.