இணையத்தில் இன்சூரன்ஸ் பாலிசி: மக்களின் கவனத்திற்கு...

செவ்வாய், 30 மே 2017 (10:22 IST)
மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்களை எல்லாம் ஆன்லைனில் வாங்குவது போல காப்பீட்டு பாலிசியையும் இப்போது ஆன்லைனில் வாங்கலாம். 


 
 
எச்டிஎப்சி லைப் போன்ற காப்பீட்டு நிறுவனங்கள் முழுமையான வாடிக்கையாளர் சேவை, பணப் பரிமாற்றங்கள், முதிர்வு தொகையைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளைக் கொண்டே வழங்குகின்றன. 
 
ஒரு வாடிக்கையாளர் பாலிசியை இணையத்தில் வாங்கும்போது இடைத்தரகர்கள் செலவு மிச்சமாகிறது. 
 
பாலிசி எடுப்பவருக்குக் காப்பீட்டு நிறுவனம் உண்மையான விலைக்கே அந்த பாலிசியை வழங்குகிறது. 
 
மேலும், பிரிமியம் தொகை மற்றும் அவற்றை செலுத்துதலில் வாடிக்கையாளருக்கு தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். 
 
ஆன்லைன் நடைமுறையின் போது பாலிசி செயலாக்கத்தை மொபைலில் எந்த நேரத்திலும் முடித்துக் கொள்ளலாம். 
 
ஆன்லைனில் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் வெவ்வேறு விதமான பாலிசி தேர்வுகள் குறித்து விவரமாக அறிந்து கொள்ள முடியும். 
 
மேலும், ஆன்லைன் பாலிசி எடுப்பது சுலபமானது, பாதுகாப்பானது மற்றும் நேரம், பணம் ஆகியவற்றைச் சேமிக்க உதவுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்