கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,26,62,575 ஆக உயர்ந்துள்ளது.
எனவே, இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அமேசான் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.