ரூ.7,777-க்கு ஏர்டெல் சலுகை + ஐபோன் 7: அதிரடி சலுகை!!

செவ்வாய், 17 அக்டோபர் 2017 (17:41 IST)
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வரத்தக தளங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக ஏர்டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. 


 
 
ஏர்டெல் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஐபோன் 7 விற்பனை நடைபெறுவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஐபோன் 7 (32 ஜிபி) வாங்குவோர் முன்பணமாக ரூ.7,777 மட்டும் தெலுத்தி மொபைல் போனை பெற்று செல்லலாம்.
 
மீதி தொகையை மாதம் ரூ.2,499 என தவணை முறையில் செலுத்தலாம். ஐபோனோடு சேர்த்து அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 30 ஜிபி டேட்டா ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
 
ஏர்டெல் தளத்தில் ஐபோன் 7 முன்பதிவு செய்தால், ஐபோன் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே வந்து விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்