விசா கட்டணம், அயல் பணி தடை குறித்து நாளை பேச்சு

திங்கள், 20 செப்டம்பர் 2010 (19:13 IST)
இந்திய தொழில் நெறிஞர்களையும், நிறுவனங்களையும் பெரிதும் பாதிக்கும் விசா கட்டண உயர்வு, வணிக அயல் பணி அளித்தலின் மீது ஒஹையோ மாகாணம் விதித்த தடை ஆகியன குறித்து நாளை நடைபெறவுள்ள வர்த்தக கொள்கை மன்றத்தில் இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் விவாதிக்கின்றனர்.

இந்திய, அமெரிக்க வர்த்தக அமைச்சக அதிகாரிகள் பங்கேற்கும் இந்த வர்த்தக கொள்கை மன்றக் (Trade Policy Forum) கூட்டத்திற்கு இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ரோன் கிர்க்-கும் தலைமை ஏற்பார்கள்.

விசா கட்டண உயர்வும், வணிக அயல் பணித் தடையும் தற்காப்பு நடவடிக்கைகள் என்று இந்தியா கூறிவருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பிரச்சனையை உலக வர்த்தக அமைப்பிற்கு கொண்டு செல்ல இந்தியா திட்டமிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்